Sunday, 22 May 2011

தீட்டிய மரத்தை கூர் பார்த்த இலவச "டிவி': வேதனையில் முடிந்த சாதனை


குஜிலியம்பாறை: ஸ்பெக்ட்ரம் "மெகா' ஊழல், மின் வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள், அரசின் இலவச "டிவி' மூலம் வெட்ட வெளிச்சம் ஆகின. "தன் தலையில் தானே மண்ணை போட்டு கொண்ட' கதையாக இலவசமாக "டிவி' யும் கொடுத்து, மண்ணையும் கவ்வியது தி.மு.க., அரசு.

கடந்த தி.மு.க., அரசு, மிகப்பெரிய சாதனையாக மார் தட்டி கொள்வது இலவச "டிவி' திட்டத்தை தான். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற அதீத நம்பிக்கைக்கு மாறாக, இலவச "டிவி' க்களே ஆட்சிக்கு எமனாக அமைந்து விட்டன என, குமுறுகின்றனர் உடன்பிறப்புகள். இலவச "டிவி' மூலம் குக்கிராம மக்களும், அன்றாட நடப்புகளை அறிந்து கொண்டனர். மக்களை கடுமையாக பாதித்த விலைவாசி உயர்வு, மின் வெட்டு பிரச்னைகள்; தேசிய அரசியலில் மையம் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலையும் மக்கள் தெள்ளத்தெளிவாக அறிந்து கொண்டனர். மேலும், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்காக, ஒரு கூட்டத்தொடர் முழுவதும் பார்லிமென்ட் முடங்கிப்போனது. இதை "டிவி' யில் பார்த்த "திருவாளர் பொது ஜனம்', "நமக்கு ஒரு ரூபாய் அரிசியை போட்டு விட்டு, ஒரு லட்சம் கோடியை விழுங்கி விட்டனர்,' என, குமுறினர். இதன் விளைவு, ஓட்டுப்போடும் நாளுக்காக காத்திருந்த மக்கள், வஞ்சம் தீர்த்தனர் என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கின்றன. "சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக', மக்களுக்கு அரசு "டிவி' வழங்க; அது, தீட்டிய மரத்தையே கூர் பார்த்து விட்டது என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment