சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.
முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:
நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,
ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.
சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,
மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,
ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:
பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:
சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.
பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,
அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.
ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.
ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.
கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.
சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,
சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,
புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.
சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.
விவசாயி மகளுக்கும் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டுரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99
டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்தை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் :தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.
கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.
டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை , டாக்டராவதே விருப்பம் என்றார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.
3 வது இடத்தை பிடித்த 24 பேர் விவரம் : 494 மார்க்குகள் பெற்று 24 மாணவ, மாணவிகள் , 3 வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:
01. நிம்ருதா, செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.
02. லட்சுமி பிரியா, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி, வடசேரி, நாகர்கோவில்
03. உமா, எஸ்.எச்.என். ஈதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலை பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
04. லலித் செல்லப்பா கார்பென்டர், பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
05. குங்குமாகல்யா, எஸ்.கே.பி. மேல்நிலை பள்ளி, உடுமலைபேட்டை, திருப்பூர்
06. இந்து, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, கவின்டாபாடி, கோபிசெட்டிபாளையம்.
07. ஹரிபிரபா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.
08. சோபனா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.
09. அசோக்குமார், எஸ்.வி. வித்யாலயா மேல்நிலை பள்ளி, தாசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10. லோகேஷ்குமார், ஜி.வி. மேல்நிலை பள்ளி, மசிலாபாளையம், சங்ககிரி.
11. விக்னேஷ்வரி, வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12. காவ்யா, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கரிமங்கலம், தர்மபுரி.
13. செந்தில்குமார், சேரன் மேல்நிலைபள்ளி, பொன்னம்சத்திரம், கரூர்.
14. ஜெயபிரகாஷ், ஈ.ஆர். மேல்நிலைபள்ளி, திருச்சி.
15. ஜோதீஸ்வரன், ஆர்.சி. மேல்நிலைபள்ளி, திருச்சி.
16. காயத்ரி, அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, பட்டுக்கோட்டை.
17. பவித்ரா தேவி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைபள்ளி, தஞ்சாவூர்.
18. அபிநயா, கலைமகள் மேல்நிலைபள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19. ஷைநி, மௌன்ட் பார்க் மேல்நிலைபள்ளி, தியாகதுர்க்கம், விழுப்புரம்.
20. சபானா பேகம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைபள்ளி, பல்லாவரம், செங்கல்பட்டு.
21. தனசேகர், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைபள்ளி, திருவள்ளூர்.
22. சங்கீதா, செயின்ட் அந்தோனியர் பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை சென்ட்ரல்.
23.தாமோதரன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.
24. அய்யப்பன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.
தமிழ் மொழிப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.
மெட்ரிக்., பிரிவில் முதலிடத்தை பிடித்த 4 மாணவிகள் : மெட்ரிக் பாடபிரிவில் மாநில அளவில் 493 மார்க்குகள் எடுத்து முலிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் விவரம் வருமாறு:
ஜெயபாரதி, கொங்குவேளாளர் மெட்ரிக்.., மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோயில், திருப்பூர்.
ஹரிஷினி ஸ்ரீ, பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் ஈரோடு.
அனிதா, செந்தில் மெட்ரிக்., பள்ளி, தர்மபுரி.
அனிக்ஷா, ஷியான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு,
No comments:
Post a Comment