சேலம்: சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் 21,000 சதுர அடி நிலத்தில் 1959ம் ஆண்டு முதல் 31 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார் இந்த நிலத்தில் இருந்தவர்களை விரட்டியடித்துவிட்டு, நிலத்தை ஆக்கிரமித்தார்.
அங்கிருந்த வீடுகளையும் இடித்துவிட்டு வேலி அமைத்தார்.
இது குறித்து அந்த 31 குடும்பத்தினரும் திமுக ஆட்சியில் போலீஸில் புகார் கொடுத்தும் பலனில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி பிரச்சனைக்குரிய நிலத்தைப் பார்வையிட்ட அப்போதைய கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, அங்கம்மாள் காலனி நிலத்தில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார்.
ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தவும், நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு கடந்த 3 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11ம் தேதி அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கணேசன் என்பவர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அதில், அப்போதைய கோட்டாட்சியர் அளித்த பொய்யான அறிக்கையை ரத்து செய்யவும், நிலத்தைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தனர்.
இதையடுத்து சேலம் மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், அவரது தம்பி மகனும், 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவருமான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கெளசிக பூபதி,
சேலம் மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, முன்னாள் கோட்டாட்சியர் பாலகுருமூர்த்தி, மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஜிம் ராமு, 'கூல்' மகேந்திரன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தன், பெட்டிக்கடை கனகராஜ், மெக்கானிக் முருகன், அதிமுக பிரமுகரான கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் கிருஷ்ணசாமி, கனகராஜ், முருகன் ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 50 கோடி நில அபகரிப்பு-இன்னொரு வழக்கு:
இதற்கிடையே சேலம் சாரதா கல்லூரி சாலையில் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்ததாகவும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சேலம் தொழிலதிபர்களான ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராமநாதன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.துரைசாமி, அசோக் துரைசாமி, கீதா, சுமித்ரா தேவி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திமுக பிரமுகர் அழகாபுரம் முரளி, விஜய்பாபு ஆகிய 11 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமீயர்
இந்த வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர். நகலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இதனால் இந்த வழக்குகள் தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய சென்னை விரைந்துள்ளார்.
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அவரையும் வழக்கில் தொடர்புடைய பிறரையும் பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Wednesday, 20 July 2011
Monday, 18 July 2011
தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
சென்னை: தலைவர் பதவியை இப்போதே தனக்குத் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோருகிறாராம். ஆனால் தலைவர் பதவியை யாருக்கும் தரக் கூடாது. கடைசி வரை கருணாநிதிதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறாராம். இதுதொடர்பாகத்தான் தற்போது கருணாநிதி குடும்பத்தில் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.
கருணாநிதி போட்ட கணக்கு இன்று தப்புக் கணக்காகி அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி என்னதான் திமுகவில் பிரச்சினை?
இதை திமுகவின் பிரச்சினை என்று கூற முடியாது. மாறாக, வாரிசுரிமை கோரி நடந்து வரும் குடும்பச் சண்டை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும், இளைய மகன் ஸ்டாலினும் ஆரம்பத்திலிருந்தே எலியும், பூணையுமாகத்தான் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் நிதானமானவராக நடந்து வந்தார். ஆனால் அழகிரி சற்று முரட்டுத்தனமானவர். இதனால்தான் ஸ்டாலினுக்குப் பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக முரசொலிப் பத்திரிக்கையை பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
மேலும் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வராமல் மிகவும் கவனத்துடன் நடந்து வந்தார் கருணாநிதி. அதன் கடும் பாதிப்புதான் வைகோ போன்ற மாபெரும் தொண்டர்களை திமுக இழந்தது.
ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட போட்டியே இல்லாமல் காய்களை நகர்த்தி வந்தார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியே எதிர்பாராத வகையில் தென் மாவட்ட திமுகவில் அழகிரி எடுத்த விஸ்வரூபம் அமைந்தது. தன்னைத் தாண்டி தென் மாவட்ட திமுகவில் ஈ எறும்பு கூட நகர முடியாத அளவுக்கு தனது நிலையை ஸ்திரமாக்கிக் கொண்டார் அழகிரி.
இதனால் அவருக்கு புதிதாக தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அத்தோடு நிற்கவில்லை அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பை கொடுக்க முடிவு செய்தால், தனக்கும் அவருக்கு நிகரான பொறுப்பைத் தர வேண்டும் என்று கருணாநிதிக்கு கண்டிஷன் போட ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரை சமாளிக்க மத்திய அமைச்சர் பதவியையும் கொடுத்தார் கருணாநிதி. ஆனாலும் அழகிரி சமாதானமாகவில்லை.
ஒரு கட்டத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஸ்டாலினை கட்சித் தலைவராக்க கருணாநிதி திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நேரடியாக சென்னை சென்று கருணாநிதியிடமே எச்சரிக்கை விடுத்தார் அழகிரி. இதனால் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் திமுகவினரை நிலை குலைய வைத்துள்ளது.
திமுகவில் மிகப் பெரிய அளவில் வாரிசுப் போர் மூண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்டாலின் கோருவது என்ன?
துணை முதல்வர் பதவி வரை அரசுப் பதவியிலும், பொருளாளர் என்ற நிலைக்கு கட்சிப் பதவியிலும் உயர்ந்த ஸ்டாலின் தற்போது கருணாநிதியிடம் கோருவது திமுக தலைவர் பதவியை என்கிறார்கள்.
கருணாநிதி தனது காலத்திலேயே தலைவர் பதவிக்கு அடுத்து வருவது யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக கூறி வருகிறாராம். மேலும், கோவையில் நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்திலேயே அதை அவர் அறிவிக்க வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் கூறினாராம். இதனால்தான் வார்த்தை தடித்து இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக கூறுகிறார்கள்.
அழகிரி சொல்வது என்ன?
அதேசமயம், தலைவர் பதவிக்கு அடுத்து இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசி வரை கருணாநிதி மட்டுமே தலைவராக இருக்க வேண்டும். அவருக்குப் பிறகு ஏற்படும் நிலை குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று கூறி வருகிறாராம் அழகிரி.
ஒருவேளை மீறி அடுத்த தலைவர் யார் என்பதை கருணாநிதி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் தான் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். அது கட்சிக்கு நல்லதல்ல என்று கருணாநிதியிடம் அழகிரி எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
இப்படி இரு பிள்ளைகளும் கடுமையாக மோதி வருவதைக் கண்டு கருணாநிதி மனம் உடைந்து போயுள்ளதாக தெரிகிறது.
மேலும், கனிமொழிக்கு இனியும் கட்சியில் முக்கியத்துவம் தரக் கூடாது என்றும் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வற்புறுத்தி வருகிறார்களாம். இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
கோவை பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது என்றும் திமுகவின் விவகாரங்கள் அறிந்தவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றேன்... அதற்கு பலன் கிடைத்தது! - விஜய்
சேலம்: தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
அதேபோல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அவரின் அந்த கருத்துக்கு ஆதரவாக சேலத்தில் என்னுடைய ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்.
இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் பார்க்காத தோல்விகளா...
இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடைக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்," என்றார்.

Tuesday, 12 July 2011
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்
சென்னை: "நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு குடும்பமும் நான்கு லட்ச ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்
கொள்ளும் வகையில், 950 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதிக்கும், புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டம் செயலுக்கு வரும் வரை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கான செலவை, அரசே செலுத்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: மனிதவள மேம்பாட்டில் முக்கிய காரணிகளாக விளங்குவது தரமான கல்வி மற்றும் சுகாதாரம். அந்த அடிப்படையில், மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதார தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் இல்லை. இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சியடையவே வழிவகுத்தது.
எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம், இந்த ஆண்டு ஜூலை 5ம் தேதியுடன் முடிந்தது. இந்த அரசால் புதிதாக துவக்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும்.
* முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதிய திட்டத்தில், ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்
படும். அதாவது, நான்கு ஆண்டுகளில், ஒரு குடும்பம் அதிகபட்சமாக, 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவை பெற இயலும்.
* முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, புதிய காப்பீட்டு திட்டத்தில், 950 வகையான சிகிச்சை முறைகள்
அனுமதிக்கப்படும்.
* சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும், அரசு மருத்துவமனைகளின் மூலமோ, மருத்துவ முகாம்களின் மூலமோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழி செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாதவர்களுக்கு, ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்க வழி செய்யவில்லை.
* நோயாளிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து, ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த கட்டணங்களை பெற, முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழி செய்யவில்லை.
* அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும், முந்தைய திட்டத்தில் இடம்பெறாதது.
*அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை
தனியார் மருத்துவமனைக்கு வழங்குவது போல, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அல்லது சிறப்பு பகுதிகள் அமைக்கப்படும். இதனால், புதிய திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிகளவில் நாடி வருவதற்குரிய சூழல் உருவாகும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய திட்டம் துவங்குவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழி செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்
படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே வழங்கும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தால், தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை என் அரசு உறுதி செய்யும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)