லண்டன்: "" பல சாதனைகளை படைத்துவிட்டாலும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (38). ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம் (99) என இவர் ஏற்படுத்தாத சாதனைகளே இல்லை எனலாம். இருப்பினும், தான் இன்னும் முதல்நிலையில் தான் உள்ளேன் என்கிறார் சச்சின். இதுகுறித்து சச்சின் கூறியது:
போட்டிகளில் எப்போது சதம் அடித்தாலும் அல்லது வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் திருப்தியாக இருக்காது. வாகனம் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென "ஹேண்ட் பிரேக்' செய்து நிறுத்துவதைப் போல, திருப்தி என்பது உடனடியாக வர வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. இதனால் தான் இன்னும் திருப்தி ஏற்படவில்லை. துவக்க நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.
கிரிக்கெட் முக்கியம்:
எனது இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் கிரிக்கெட் மீது, தீவிர ஆர்வம் கொண்டுள்ளேன். இப்போது மட்டுமல்ல எப்போதும் கிரிக்கெட்டை விரும்புவேன். ஏனெனில் இதுதான் என்னுடைய வேலை. இதுதவிர, வேறெதுவும் எனக்கு தூண்டுதலாக அமையாது.
இளவயது கனவு:
இளவயதில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போதும் அதே ஆசையுடன் தான் உள்ளேன். இதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாக உள்ளது. மொத்தத்தில் கிரிக்கெட் இல்லாமல் எனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கமுடியாது.
சாதிக்க ஆலோசனை:
இன்னும் கிரிக்கெட் குறித்து கற்று கொண்டு தான் உள்ளேன். ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போதெல்லாம், இதற்கு முன் எடுத்த ரன்களை கணக்கில் கொள்ளமாட்டேன். இதனால் மனது "ரிலாக்சாக' இருக்கும். பின் "புட்வொர்க்' அல்லது பேட்டிங் "ஸ்டைலில்' சூழ்நிலைக்கேற்ப சிறிய மாற்றம் செய்து கொள்வேன். எல்லாமே தனக்குத் தெரியும் என்ற மனப்பான்மை இல்லாமல் இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த முறையில் தயார் ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்கலாம்.
அந்தரத்தில் பறந்தேன்:
சமீபத்தில் உலக கோப்பை வென்றபோது, பல்வேறு வகையான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போல உணர்ந்தேன். தவிர, அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல்வேறு சாதனைகள் படைத்து இருந்தாலும், உலக கோப்பைக்காக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இந்த உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்.
வீரர்கள் பாராட்டு:
சச்சின் குறித்து அவரது சக வீரர் டிராவிட் கூறுகையில்,"" சூழ்நிலைக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொள்ளும், சச்சினின் பேட்டிங்கை ரசித்துக்கொண்டே இருக்கலாம். மாஸ்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவர், இப்போது "மிஸ்டேக்-புரூப்' (தவறு செய்யாத) பேட்ஸ்மேனாகி உள்ளார். பொதுவாக மனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், தேவையில்லாத கோபத்தை குறைத்துக்கொள்ளலாம். சச்சினை அவரது மனது தான் கட்டுப்படுத்துகிறது, அவரது வயது அல்ல,'' என்றார்.
ஜாகிர் கான் கூறுகையில்,"" தவறாக அவுட்டாகி விட்டோம் என்று சச்சின், ஒருமுறை கூட பேட்டினை தூக்கி எறிந்தது கிடையாது. வீரர்கள் அறையில் ஒருமுறை கூட அவர் கோபமாக இருந்து பார்த்ததில்லை. எப்போதும் அமைதியாக இருப்பார்,'' என்றார்.
ரிச்சர்ட்ஸ் புகழாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனை பார்த்ததில்லை. ஆனால் என்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களில், சச்சினை விட சிறந்தவர் யாரும் இல்லை. இனிமேலும் அவரைப் போல ஒருவர் வரப் போவதில்லை. இவரது காலத்தில் உள்ள லாரா, பாண்டிங், காலிஸ் மற்றும் கவாஸ்கர், மியாண்தத் என அனைவரையும் விட சச்சின் மேலோங்கியுள்ளார்.
பிராட்மேன் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து இருந்தார். ஆனால் வலிகள், மனவேதனை, தோல்விகள், சோர்வுறுதல் மற்றும் காயங்கள் என அனைத்தையும் கடந்து, 22 ஆண்டுகளாகியும் சச்சின் எப்படி ஜொலித்துக் கொண்டுள்ளார் என்பது தான் வியப்பாக உள்ளது.
இவ்வாறு ரிச்சர்ட்ஸ் கூறினார்.

No comments:
Post a Comment