Sunday, 26 June 2011

இலங்கை கப்பல்படை தொடர் அட்டூழியம்: விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு பிரச்னை


ராமேஸ்வரம் :கச்சத்தீவுபகுதியில் இலங்கை கப்பல்படை தொடர்ந்து அட்டூழியம் செய்வதால் கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்படையினர் ஆயுதங்களால் தாக்குவதும் மீன்களை கடலில் கொட்டுவதுமாக பல்வேறு இன்னல்களை தந்து வந்தனர். தமிழக மீனவர்கள் பொறுமை காத்து வந்தநிலையில் மாநில அரசு மத்திய அரசிடம் மீனவர்களை காப்பாற்ற வேண்டி வேண்டுகோள் விடுத்து வந்தது.ஆனால் மீனவர்கள் பிரச்னையை யாரும் முக்கியமானதாக கருதவில்லை.

சமீபத்தில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கைது செய்து தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கப்பல் படை அனுராதாபுரத்தில் உள்ள சிறையில் அடைத்துவைக்கப்பட்டனர்.தொடர்ந்து மத்திய அரசின் தலையீட்டால் நாளை(திங்கட்கிழமை) விடுதலைசெய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கப்பல்படை, மீனவர்களை விரட்டியடித்தது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவுவரலாறு: கச்சத்தீவு யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ., தூரத்திலும், ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது. இத்தீவு 1882ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதியிடம் இருந்தது. 1955-56ல் இலங்கை கச்சத்தீவில் தனது கடற்படைக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தது. ஜே.வி.பி., என்ற சிங்கள அமைப்பு, இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரத்துக்காக, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க இந்தியா கொள்கை அளவில் முடிவு எடுத்தது. கடந்த 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்த மத்திய அரசு, அதற்கான நிபந்தனைகளையும் விதித்தது. அதில் இந்திய மீனவர்கள் அங்குள்ள கோயில் திருவிழாவுக்கு தடையின்றி வந்து செல்லவும், படகுகளை நிறுத்தி வலைகளை உலர்த்தவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. கச்சத்தீவுக்கு நடுவிலுள்ள கல்லுமலை அருகே ஆழ்கிணற்றின் குடிநீரால் ராமேஸ்வரத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம். கச்சத்தீவு கடலில் கிடைக்கும் இறால்கள் உலகத்தரம் வாய்ந்தவை. கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நூற்றாண்டுக்கு தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு-குமரி முனைக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற உயர்ரக தனிமங்கள் உள்ளன.

நீர்மூழ்கி கப்பல்களையும், போர் படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த இடமாக கச்சத்தீவு விளங்குகிறது. தற்காலிகமாக இவற்றை இழந்து நிற்கும் நாம், இவற்றை நிரந்தரமாக இழப்பதற்கு முன் கச்சத்தீவை மீண்டும் பெற முன் வர வேண்டும். பிலிப்பைன்ஸ் எல்லையிலுள்ள "பால்மஸ் மியான்ஜஸ்' என்னும் தீவு நெதர்லாந்துக்கு சொந்தமானது. அந்த தீவை ஸ்பெயின் கைப்பற்றியது.

பின்னர் அதை பிரெஞ்சுக்கு தாரை வார்த்தது. ஆனால் நெதர்லாந்து மக்கள், உலக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இழந்த உரிமையை பெற்றனர். அதுபோல் கச்சத்தீவு உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக்கூடாது. கச்சத்தீவு, எண்ணற்ற இயற்கை வளங்களை கொண்டது. அதை பெறுவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

Saturday, 25 June 2011

அம்பயர் ஹார்ப்பர் மீது இந்திய வீரர்கள் பாய்ச்சல்! * தவறான தீர்ப்பு அளித்ததாக புகார்

கிங்ஸ்டன்: கிங்ஸ்டன் டெஸ்டில் அம்பயர் ஹார்ப்பர் அளித்த தவறான தீர்ப்புகளால் இந்திய வீரர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இவர், அம்பயராக செயல்படக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இவர் சரியாக செயல்பட்டு இருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னும் விரைவாக வெற்றி பெற்றிருக்கலாம் என, கேப்டன் தோனி பகிரங்கமாக கூறியுள்ளார். 
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 246, வெஸ்ட் இண்டீஸ் 173 ரன்கள் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. 
பின் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பலமுறை, மோசமான "அவுட்' கொடுக்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அம்பயர் டேரல் ஹார்ப்பருக்கு எதிராக அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது: 
முதல் டெஸ்டில் அம்பயர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்பது உண்மை தான். ஒருவேளை இவர்கள் சரியான முறையில் தீர்ப்பு வழங்கி இருந்தால், போட்டி இன்னும் விரைவாக முடிந்திருக்கும். நாங்களும் விரைவாக ஓட்டலுக்கு திரும்பி இருப்போம். 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் இன்னிங்சில் 85 ரன்னுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் களமிறங்கிய ஹர்பஜன், ரெய்னாவுடன் இணைந்து ரன்குவிப்புக்கு உதவினார். இரண்டாவது இன்னிங்சில் அமித் மிஸ்ரா கைகொடுத்தார். இதனால் தான், 300 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற முடிந்தது. டிராவிட்டும் அசத்தினார். 250க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்த பின்பும், களைப்படையாமல் ரன்கள் சேர்த்தார். 
பவுலர்கள் ஒருநாள் போட்டியில் இருந்து, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒருநாளைக்கு 20 முதல் 25 ஓவர்கள் பவுலிங் செய்ய வேண்டும். தவிர, சோர்வுறாமல் இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் வெற்றி கிடைக்கும். 
இந்தவகையில், பிரவீண் குமார் வேகமாக மட்டும் பந்து வீசவில்லை. பந்துகளை இரண்டு புறமும் "சுவிங்' செய்தார். 
இவ்வாறு தோனி கூறினார். 
"சீனியர்கள்' எதிர்ப்பு: 
இதனிடையே அம்பயரின் மோசமான தீர்ப்பு குறித்து இந்திய அணியின் "சீனியர்' வீரர் ஒருவர் கூறியது: 
முதல் டெஸ்டில் 6 முறை தவறான "அவுட்' கொடுத்துள்ளார் டேரல் ஹார்ப்பர் (ஆஸி.,). மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அம்பயர் பட்டியலில் இருந்து இவரை நீக்க வேண்டும். இவர் எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் ஹார்ப்பர் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். 
கடந்த 2000ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற போது, மெக்ராத் பந்தை எதிர்கொண்ட சச்சின் குனிந்தார். பந்து இவரது தோள்பட்டையில் பட்டது. ஆனால், ஹார்ப்பர், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் கொடுத்தார். 
இவ்வாறு அந்த வீரர் தெரிவித்தார். 
மற்றொரு இந்திய வீரர் கூறுகையில்,"" ரெய்னா, ஹர்பஜனுக்கு தவறாக "அவுட்' கொடுக்கப்பட்டது. "நோ பாலில்' தோனி அவுட்டானார். இந்த மூன்றும் ஹார்ப்பரால் தரப்பட்டது. தவிர, டேரன் பிராவோவுக்கு இரண்டு முறை, சந்தர்பாலுக்கு ஒருமுறை சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது,'' என்றார்.
சம்மதிக்குமா பி.சி.சி.ஐ.,
ஒவ்வொரு முறை தவறான தீர்ப்புகள் வழங்கப்படும் போதெல்லாம், விவாதிப்பதோடு சரி, அவ்வளவு தான். ஆனால், உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட, அம்பயர் மறுபரிசீலனை முறையை (டி.ஆர்.எஸ்.,) பயன்படுத்த, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால், பி.சி.சி.ஐ., தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
---
வெற்றி கேப்டன்
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற வரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளார் தோனி. இதுவரை இவரது தலைமையில் இந்திய அணி பங்கேற்ற 25 போட்டிகளில் 15 வெற்றி, 3 தோல்வி, 7 "டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60%. 
* அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற வரிசையில், கங்குலிக்கு (49ல் 21 வெற்றி) அடுத்த இடத்தை தோனி பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் அசார் (47ல் 14 வெற்றி) உள்ளார்.
* தவிர, இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை.
---
ராம்பாலுக்கு அபராதம்
முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில், வெஸ்ட் இண்டீசின் ராம்பால் அம்பயர் தீர்ப்பை எதிர்த்து முறையிட்டார். இவரது செயல் ஐ.சி.சி., விதி லெவல் 1ஐ மீறியது என்பதால் போட்டிக்கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, "அவுட்' இல்லாத போதும், பந்து எங்கு பட்டது என்பதை அம்பயரிடம் தெரிவித்த சமியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Friday, 24 June 2011

ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு


ஒவ்வொரு குடும்பத்துக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை சேர்த்தே, "பேக்கேஜ்' ஆக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படும், 25 லட்சம் பொருட்களை, எந்தெந்த குடும்பத்துக்கு வழங்குவது என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அரிசி வாங்க தகுதியுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், முதல் கட்டமாக, 25 லட்சம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளது. இவற்றை வினியோகிக்கும் பணி, செப்டம்பர் 15ம் தேதி துவங்க உள்ளது. இதில், தலா, 25 லட்சம் பொருட்கள் கொள்முதல் செய்வதால், மொத்தம், 75 லட்சம் பொருட்களை, ஒரு வீட்டுக்கு மிக்சி, மற்றொரு வீட்டுக்கு கிரைண்டர், இன்னொரு வீட்டுக்கு மின்விசிறி என அளித்தால், 75 லட்சம் குடும்பங்கள் ஒரே சமயத்தில் பயனடையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, மூன்றையும் சேர்த்தே ஒரே, "பேக்கேஜ்' ஆக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மூன்று பொருட்களும் மொத்தமாகவே வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், ஒரு வீட்டுக்கு மின்விசிறி கிடைத்து, இன்னொரு வீட்டுக்கு கிரைண்டர் கிடைத்தால் ஏற்படும் அதிருப்தி தவிர்க்கப்படும்.

மேலும், மூன்று பொருட்களுமே மிகவும் தரமாக இருக்கவேண்டும் என்பதில், தமிழக அரசுஉறுதியாக உள்ளது. சந்தையில் உயர்தரத்தில் உள்ள பொருளையே வழங்க வேண்டுமென விரும்புகிறது. இதற்காக, எந்த நிறுவனம் சப்ளை செய்தாலும், அரசு நிர்ணயித்து உள்ள தரத்துடன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 25 லட்சம் மிக்சி கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், கிரைண்டர் கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், மின்விசிறி கொள்முதல் செய்ய, 250 கோடி ரூபாய்க்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர், ஜூலை 11ம் தேதி திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, இப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த 21ம் தேதி நடத்தப்பட்டது. அதில், பொருட்களின் தரம் குறித்து, நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. அவர்களது சந்தேகங்கள்குறித்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு உள்ளன. இவற்றுக்கும் உரிய விளக்கங்களை அரசு அளிக்க உள்ளது.

டெண்டர் முடிந்து, பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவு, ஜூலை 15ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். எனவே, செப்டம்பர் 15ம் தேதி முதல், பொருட்களின் வினியோகம் துவங்கும். ஒரே நிறுவனத்துக்கு, 25 பொருட்களையும் தயாரிக்கும் உரிமத்தை கொடுக்காமல், பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில் என்ன தரத்தில் கிரைண்டர் வழங்கப்படுகிறதோ, அதே தரத்தில் மதுரை அல்லது கன்னியாகுமரியிலும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. முதல் கட்டமாக, 25 லட்சம் பொருட்களை கொள்முதல் செய்வதால், மொத்தமுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைகளில், யாருக்கு முதலில் இவற்றை வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல் கட்டமாக பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ள, "அந்த்யோதயா அன்னா யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இவற்றை வழங்கலாமா அல்லது அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும் பரவலாக கிடைக்கும் வகையில் பொருட்களை வழங்கலாமா என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் வெளியிடப்படும்.

வருவாய்த் துறையே பொறுப்பு: மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்தாலும், அவை, ஏற்கனவே இலவச "டிவி' வழங்கப்பட்ட முறைப்படியே மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. அதாவது, வருவாய்த் துறையினர் மூலமே வினியோகம் செய்யப்படும். எனினும், இப்பொருட்கள் உரியவர்களுக்கு உரியமுறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பதையும், அவற்றின் தரம் மற்றும் அப்பொருட்களை, "சர்வீஸ்' செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், புதியதுறையான சிறப்பு திட்ட அமலாக்கத் துறை கண்காணிக்கும். இதற்காக, மாவட்ட அளவில், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை சார்பாக, புதிதாக ஆட்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு இலவசப்பொருட்கள் கிடைப்பதை, இத்துறை உறுதி செய்யும்

தோனிக்கு "லியுடெனன்ட் கலோனெல்' விருது

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு, "லியுடெனன்ட் கலோனல்' விருது வழங்க, ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன் முண்டா பரிந்துரை செய்துள்ளார்.
விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் கவுரவ விருதுகள் வழங்கப்படுகிறது. 2008ல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு, "டெரிட்டோரியல் ஆர்மி' என்ற கவுரவ விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், விமானப்படை சார்பில் "குரூப் கேப்டன்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணையவுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் "செல்லப் பிள்ளையாக' இருக்கும் தோனி, ஏற்கனவே ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் மாநிலத்தில் புலி பாதுகாப்பு இயக்கத்தின் தூதுவராக உள்ளார். தவிர, தனிநபரில் அதிகபட்ச வருமான வரி செலுத்திவரும் இவரை, வருமான வரித்துறையின் தூதுவராக நியமிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
விரைவில், கிரிக்கெட் அகாடமி துவங்கும் எண்ணத்தில் உள்ள தோனிக்கு, தேவையான நிலம் ஒதுக்க இருப்பதாக, கடந்த ஏப்ரலில் துணை முதல்வர் சுதேஷ் மகடோ அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, மத்திய பாதுகாப்பு துறைக்கு எழுதிய கடிதத்தில்,"அணியை திறம்பட வழிநடத்தும் தோனி, இந்தியாவுக்கு இரண்டாவது உலக கோப்பை வென்று தந்தார். இவருக்கு ராணுவத்தின் "லியுடெனன்ட் கலோனெல்' என்ற கவுரவ விருது வழங்கவேண்டும்,' என, பரிந்துரை செய்துள்ளார்.
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு, "லியுடெனன்ட் கலோனல்' விருது வழங்க, ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன் முண்டா பரிந்துரை செய்துள்ளார்.
விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் கவுரவ விருதுகள் வழங்கப்படுகிறது. 2008ல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு, "டெரிட்டோரியல் ஆர்மி' என்ற கவுரவ விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், விமானப்படை சார்பில் "குரூப் கேப்டன்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணையவுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் "செல்லப் பிள்ளையாக' இருக்கும் தோனி, ஏற்கனவே ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் மாநிலத்தில் புலி பாதுகாப்பு இயக்கத்தின் தூதுவராக உள்ளார். தவிர, தனிநபரில் அதிகபட்ச வருமான வரி செலுத்திவரும் இவரை, வருமான வரித்துறையின் தூதுவராக நியமிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
விரைவில், கிரிக்கெட் அகாடமி துவங்கும் எண்ணத்தில் உள்ள தோனிக்கு, தேவையான நிலம் ஒதுக்க இருப்பதாக, கடந்த ஏப்ரலில் துணை முதல்வர் சுதேஷ் மகடோ அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, மத்திய பாதுகாப்பு துறைக்கு எழுதிய கடிதத்தில்,"அணியை திறம்பட வழிநடத்தும் தோனி, இந்தியாவுக்கு இரண்டாவது உலக கோப்பை வென்று தந்தார். இவருக்கு ராணுவத்தின் "லியுடெனன்ட் கலோனெல்' என்ற கவுரவ விருது வழங்கவேண்டும்,' என, பரிந்துரை செய்துள்ளார்.

இந்திய அணி அசத்தல் வெற்றி *பரிதாபமாக வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

கிங்ஸ்டன்: கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜொலிக்கத் தவறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சொந்த மண்ணில் பரிதாபமாக தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டன் (ஜமைக்கா) நகரில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி ரெய்னா (82), ஹர்பஜன் சிங் (70) உதவியுடன் 246 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்னுக்கு சுருண்டது.
தோனி ஏமாற்றம்:
நேற்று முன்தினம் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. விராத் கோஹ்லி (15), ரெய்னா (27) இருவரும் அம்பயர்கள் ஹார்பர், இயான் கோல்டின் தவறான தீர்ப்பில் வெளியேறினார். கேப்டன் தோனி 16 ரன்களுடன் திரும்பினார்.
டிராவிட் சதம்:
ஹர்பஜன் (5), பிரவீண் குமார் "டக்' அவுட்டாகினர். ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட், சர்வதேச அளவில் 32வது சதம் கடந்து அசத்தினார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த அமித் மிஸ்ரா 28 ரன்கள் எடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் டிராவிட்டும் (112) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சமி, தேவேந்திர பிஷூ தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அபார முன்னிலை:
இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆட்ரியன் பரத், சிம்மன்ஸ் இணைந்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். இஷாந்த் சர்மாவின் ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் பரத். மறுமுனையில் சிம்மன்ஸ், தன்பங்கிற்கு அமித் மிஸ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டினார்.
முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில், பரத் (36 பந்தில் 38 ரன்கள்) பிரவீண் குமார் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சர்வான் "டக்' அவுட்டானார். சிம்மன்ஸ் (27), இஷாந்த் பந்தில் போல்டானார். இதன் பின் சந்தர்பால், டேரன் பிராவோ இணைந்து மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
விக்கெட் மட, மட...
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. நீண்ட நேரம் தாக்குப்பிடித்த டேரன் பிராவோ (41) இஷாந்த் பந்தில் போல்டானார். அடுத்த சில நிமிடங்களில் சந்தர்பாலும் (30) நிலைக்கவில்லை. பாக் "டக்' அவுட்டானார். ஹர்பஜன் ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய கேப்டன் சமி (25), பிரண்டன் நாஷ் (8) இருவரும் அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினர்.
இந்தியா வெற்றி:
அதிரடியாக ரன்கள் சேர்த்த ராம்பால் (34), தோனியின் "சூப்பர்' கேட்ச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பிஷூ (26) போராடி வீழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில், 262 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் தலா 3, அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், வரும் 28ம் தேதி பிரிஜ்டவுனில் துவங்குகிறது.

ஸ்கோர்போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா    246
வெஸ்ட் இண்டீஸ்    173
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா    252
வெஸ்ட் இண்டீஸ்
பரத்(கே)ரெய்னா(ப)பிரவீண்    38(36)
சிம்மன்ஸ்(ப)இஷாந்த்    27(41)
சர்வான்(கே)கோஹ்லி(ப)இஷாந்த்    0(2)
பிராவோ(ப)பிரவீண்    41(89)
சந்தர்பால்(கே)ரெய்னா(ப)பிரவீண்    30(73)
நாஷ்-எல்.பி.டபிள்யு(ப)மிஸ்ரா    9(36)
பாக்(கே)கோஹ்லி(ப)ஹர்பஜன்    0(4)
சமி(கே)லட்சுமண்(ப)மிஸ்ரா    25(11)
ராம்பால்(கே)தோனி(ப)இஷாந்த்    34(32)
எட்வர்ட்ஸ்-அவுட் இல்லை-    15(54)
பிஷூ(ப)ரெய்னா    26(33)
உதிரிகள்    17
மொத்தம் (68.2 ஓவரில், ஆல் அவுட்)    262
விக்கெட் வீழ்ச்சி: 1-62(பரத்), 2-63(சர்வான்), 3-80(சிம்மன்ஸ்), 4-148(பிராவோ), 5-149(சந்தர்பால்), 6-150(பாக்), 7-181(சமி), 8-188(நாஷ்), 9-223(ராம்பால்), 10--262(பிஷூ).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 16-3-42-3, இஷாந்த் சர்மா 17-3-81-3, அமித் மிஸ்ரா 13-1-62-2, ஹர்பஜன் 16-3-54-1, ரெய்னா 6.2-1-9-1.
கிங்ஸ்டன்: கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜொலிக்கத் தவறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சொந்த மண்ணில் பரிதாபமாக தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டன் (ஜமைக்கா) நகரில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி ரெய்னா (82), ஹர்பஜன் சிங் (70) உதவியுடன் 246 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்னுக்கு சுருண்டது.
தோனி ஏமாற்றம்:
நேற்று முன்தினம் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. விராத் கோஹ்லி (15), ரெய்னா (27) இருவரும் அம்பயர்கள் ஹார்பர், இயான் கோல்டின் தவறான தீர்ப்பில் வெளியேறினார். கேப்டன் தோனி 16 ரன்களுடன் திரும்பினார்.
டிராவிட் சதம்:
ஹர்பஜன் (5), பிரவீண் குமார் "டக்' அவுட்டாகினர். ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட், சர்வதேச அளவில் 32வது சதம் கடந்து அசத்தினார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த அமித் மிஸ்ரா 28 ரன்கள் எடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் டிராவிட்டும் (112) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சமி, தேவேந்திர பிஷூ தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அபார முன்னிலை:
இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆட்ரியன் பரத், சிம்மன்ஸ் இணைந்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். இஷாந்த் சர்மாவின் ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் பரத். மறுமுனையில் சிம்மன்ஸ், தன்பங்கிற்கு அமித் மிஸ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டினார்.
முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில், பரத் (36 பந்தில் 38 ரன்கள்) பிரவீண் குமார் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சர்வான் "டக்' அவுட்டானார். சிம்மன்ஸ் (27), இஷாந்த் பந்தில் போல்டானார். இதன் பின் சந்தர்பால், டேரன் பிராவோ இணைந்து மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
விக்கெட் மட, மட...
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. நீண்ட நேரம் தாக்குப்பிடித்த டேரன் பிராவோ (41) இஷாந்த் பந்தில் போல்டானார். அடுத்த சில நிமிடங்களில் சந்தர்பாலும் (30) நிலைக்கவில்லை. பாக் "டக்' அவுட்டானார். ஹர்பஜன் ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய கேப்டன் சமி (25), பிரண்டன் நாஷ் (8) இருவரும் அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினர்.
இந்தியா வெற்றி:
அதிரடியாக ரன்கள் சேர்த்த ராம்பால் (34), தோனியின் "சூப்பர்' கேட்ச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பிஷூ (26) போராடி வீழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில், 262 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் தலா 3, அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், வரும் 28ம் தேதி பிரிஜ்டவுனில் துவங்குகிறது.

ஸ்கோர்போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா    246
வெஸ்ட் இண்டீஸ்    173
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா    252
வெஸ்ட் இண்டீஸ்
பரத்(கே)ரெய்னா(ப)பிரவீண்    38(36)
சிம்மன்ஸ்(ப)இஷாந்த்    27(41)
சர்வான்(கே)கோஹ்லி(ப)இஷாந்த்    0(2)
பிராவோ(ப)பிரவீண்    41(89)
சந்தர்பால்(கே)ரெய்னா(ப)பிரவீண்    30(73)
நாஷ்-எல்.பி.டபிள்யு(ப)மிஸ்ரா    9(36)
பாக்(கே)கோஹ்லி(ப)ஹர்பஜன்    0(4)
சமி(கே)லட்சுமண்(ப)மிஸ்ரா    25(11)
ராம்பால்(கே)தோனி(ப)இஷாந்த்    34(32)
எட்வர்ட்ஸ்-அவுட் இல்லை-    15(54)
பிஷூ(ப)ரெய்னா    26(33)
உதிரிகள்    17
மொத்தம் (68.2 ஓவரில், ஆல் அவுட்)    262
விக்கெட் வீழ்ச்சி: 1-62(பரத்), 2-63(சர்வான்), 3-80(சிம்மன்ஸ்), 4-148(பிராவோ), 5-149(சந்தர்பால்), 6-150(பாக்), 7-181(சமி), 8-188(நாஷ்), 9-223(ராம்பால்), 10--262(பிஷூ).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 16-3-42-3, இஷாந்த் சர்மா 17-3-81-3, அமித் மிஸ்ரா 13-1-62-2, ஹர்பஜன் 16-3-54-1, ரெய்னா 6.2-1-9-1.

Tuesday, 21 June 2011

குரான் படிக்கிறார் டோனி பிளேர்

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்

கண்தானம் செய்யுங்கள் - நடிகர் விஜய் வேண்டுகோள்

சென்னை: தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:

"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.''

-இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துார்விட்டதையடுத்து அவரை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.

காலை 8.20 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட்டார். திகார் சிறைக்குச் சென்று கனிமொழியை அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

முன்னதாக கனிமொழியின் ஜாமீன் தள்ளுபடியானவுடன் மூத்த திமுக தலைவர்களுடன் சென்னையில் தனது இல்லத்தில் கருணாநிதி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இன்று கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, தலைமை நிலையச் செயலாளர் காஜாமொகைதீன், கருணாநிதியின் டாக்டர் பிரவீன் ஆகியோர் டெல்லி சென்றனர்.

டெல்லியில் அவர் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் கருணாநிதி சந்தித்துப் பேசக் கூடும் என்று தெரிகிறது.

2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். அதன் பின்னரே கனிமொழி மீண்டும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட்: இந்திய அணி 246 ரன் சேர்ப்பு:வெ.இண்டீஸ் 34/1


கிங்ஸ்டன்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது.முன்னதாக இந்‌தியா முதல் இன்னிங்ஸில் 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் திணறல் துவக்கம் கண்ட இந்திய அணி, தேநீர் இடைவேளைக்கு சற்று முன், முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், கிங்ஸ்டன் ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது. 
சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் மீண்டும் அணிக்கு திரும்பினர். தமிழக வீரர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் ஆகிய மூவரும், அறிமுக வீரர்களாக களமிறங்கினர். "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

விஜய் ஏமாற்றம்:இந்திய அணிக்கு தமிழத்தின் முரளி விஜய், அபினவ் முகுந்த் இருவரும் இணைந்து துவக்கம் தந்தனர். முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய முகுந்த், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். ராம்பால் பந்தில் பவுண்டரி அடித்த முரளி விஜய் (8), அவரிடமே வீழ்ந்தார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த முகுந்த் (11), கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். 

150வது போட்டி:தனது 150 வது டெஸ்டில் களமிறங்கிய அனுபவ டிராவிட்டுடன், லட்சுமண் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில், லட்சுமண் (12), பிஷூ சுழலில் சிக்கினார். அடுத்து வந்த விராத் கோஹ்லி (4) நிலைக்கவில்லை. 
உணவு இடைவேளைக்கு பின், 40 ரன்கள் எடுத்த டிராவிட் அவுட்டானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, "டக் அவுட்டாகினார். பின் வந்த ஹர்பஜன் சிங், பிஷூ ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். தொடர்ந்து இவர் ராம்பாலையும் விட்டுவைக்கவில்லை. இவரது ஓவரில் ஹர்பஜன், 3 பவுண்டரிகள் அடித்தார். 
மறுமுனையில் ரெய்னாவும், பிஷூ ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பாக இந்திய அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னா (25), ஹர்பஜன் சிங் (45) அவுட்டாகாமல் இருந்தனர். பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி இறுதியில் 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரெய்னா 82, ஹர்பஜன் 70, மற்றும் டிராவிட் 40 ரன்னும் எடு்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகளும் ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகளை வீழத்தினர். பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்டம் முடிவில் 1 வி்‌க்கெட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது. அந்த அணி 212 ரன் பின்தங்கி உள்ளது.

சென்னையில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20

புதுடில்லி: வென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டாவில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து, சர்வதேச அளவில் உள்ளூர் போட்டிகளில் சாதித்த அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை ஆண்டுதோரும் நடத்துகின்றன. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் செப்.23ம் தேதி முதல் அக்.9ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.
சென்னையில் பைனல்:
இப்போட்டிகள் அனைத்தும் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட மூன்று முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் செப்.23ம் தேதி தொடரின் முதல் போட்டி நடக்கவுள்ளது. தவிர இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் அக்.9ம் தேதி பைனல் நடக்கவுள்ளது. இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கிறது.
தகுதிச் சுற்று:
இத்தொடரில் 13 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏழு அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதி அணிகளுக்கு, தகுதிச் சுற்று நடத்தப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க முடியும். இதன்மூலம் 10 அணிகள் (நேரடி 7 + தகுதிச் சுற்று 3) இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
கோல்கட்டா வாய்ப்பு:
சமீபத்தில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மூன்றாவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் (ஆஸ்திரேலியா), நியூ சவுத் வேல்ஸ் புளூ (ஆஸ்திரேலியா), வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), கேப் கோப்ரா (தென் ஆப்ரிக்கா) உள்ளிட்ட ஏழு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ், ஆக்லாந்து ஆசஸ் (நியூசிலாந்து), டிரினிடாட் அன்ட் டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்), இங்கிலாந்து கவுன்டி சாம்பியன் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகள், இலங்கையில் நடக்கும் "டுவென்டி-20' சாம்பியன் உட்பட ஆறு அணிகள் தகுதிச் சுற்றில் மோத உள்ளன. இப்போட்டிகள் செப்.19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கவுள்ளது.
இத்தொடருக்கான முழு அட்டவணை, விரைவில் வெளியிடப்படும் என சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Thursday, 16 June 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் 'செட்டப்'?-அம்பலப்படுத்தும் வீடியோ!

டேராடூன்: ஊழலை ஒழிக்கக் கோரி பத்து நிபந்தனைகளை விதித்து பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் ஒரு செட்டப் டிராமா என்று புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலா வர ஆரம்பித்துள்ள ஒரு வீடியோதான் ராம்தேவ் மீதான சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

யூடியூபில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ஜிபி ஜர்னலிஸ்ட் என்ற பெயரில் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒருவருடன் தொலைபேசியில் பேசுகிறார். மறு முனையில் உள்ளவரை பாபுஜி என்று விளித்துப் பேசும் பொக்ரியால், பாபாவின் (ராம்தேவ்) உண்ணாவிரதத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறார் பொக்ரியால்.

இந்த உரையாடல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. பாபா ராம்தேவ் தனது ஆசிரமத்தில் இருந்து வந்தது செட்டப் உண்ணாவிரதமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்தேவ் உண்ணாவிரதத்தில் குதிப்பதற்கு முன்பிருந்தே அவரை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்து வந்தார். உண்ணாவிரதத்தில் குதித்து டெல்லி போலீஸாரால் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்ட போதும் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் திக்விஜய் சிங். ராம்தேவை தாதா என்றும் கூலிப்படையினரை வைத்துக் கொண்டு மத்திய அரசை மிரட்டுகிறார் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

டெல்லி உண்ணாவிரத முயற்சி தோல்வி அடைந்தாதல் ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்திற்குத் திரும்பிய ராம்தேவ் அங்கு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். பின்னர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பிங்கால் ராம்தேவுக்குப் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

பதிலடி கொடுக்குமா இளம் இந்தியா! * இன்று வெ. இண்டீசுடன் கடைசி மோதல்

கிங்ஸ்டன்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது.
ரோகித் நம்பிக்கை:
முதல் மூன்று போட்டியில் அசத்திய இந்திய அணி, நான்காவது போட்டியில் சறுக்கியது. இன்று எழுச்சி காண வேண்டும். இதுவரை நான்கு போட்டிகளில் 200 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா, "மிடில்-ஆர்டரில்' நம்பிக்கை அளிப்பது பலம். துவக்க வீரராக பார்த்திவ் படேல் சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு மனோஜ் திவாரி, ஷிகர் தவான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. விராத் கோஹ்லி, பத்ரிநாத், ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அசத்தினால், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
மிஸ்ரா அபாரம்:
இந்திய அணியின் மிகப் பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. கடந்த நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட் வீழ்த்தியுள்ள சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு ஹர்பஜன் சிங், அஷ்வின் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் முனாப் படேல், பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.
சர்வான் ஆறுதல்:
வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த துவக்கம் இல்லாமல் திணறுகிறது. கடந்த போட்டியில் அரைசதம் கடந்த சிம்மன்ஸ் இன்றும் சாதிக்கலாம். கடந்த நான்கு போட்டிகளில் 141 ரன்கள் எடுத்துள்ள அனுபவ வீரர் சர்வான், ஓரளவு ஆறுதல் அளிக்கிறார். போலார்டு, கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் உள்ளிட்டோர் அதிரடியாக எழுச்சி கண்டிருப்பது பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்களுடன் டேரன் பிராவோ, சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
மார்டின் துல்லியம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சில் கேப்டன் டேரன் சமி நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஆன்ட்ரூ ரசல், ரவி ராம்பால், கீமர் ரோச் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது. சுழலில் தேவேந்திர பிஷூ சிறப்பாக செயல்படுகிறார். கடந்த போட்டியில் விக்கெட் மழை பொழிந்த அந்தோனி மார்டின், இன்றும் சுழலில் சாதிக்கும் பட்சத்தில் இரண்டாவது வெற்றியை பெறலாம்.
இப்போட்டியில் கிடைக்கும் வெற்றி, அடுத்து வரவுள்ள டெஸ்ட் தொடருக்கு மனரீதியாக உற்சாகம் அளிக்கும் என்பதால், இரு அணிகளும் முழுத்திறமையை வெளிப்படுத்தலாம்.
----
கெய்ல் இல்லை
ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிர்க் எட்வர்ட்ஸ், ஹயாத் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக அட்ரியன் பரத், ரவி ராம்பால் இடம் பிடித்துள்ளனர். நட்சத்திர துவக்க வீரர் கிறிஸ் கெய்லுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Tuesday, 14 June 2011

தோனிக்கு பாராட்டு விழா

ஜாம்ஷெட்பூர்: உலக கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி மற்றும் 34வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு, விரைவில் பாராட்டு விழா நடக்கவுள்ளது.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதனால் அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அரசு சார்பில், விரைவில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநில துணை முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சர் சுதேஷ் மகத்தோ கூறியது:
உலக கோப்பை வென்ற கேப்டன் தோனி, 34வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களால் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பெருமை கிடைத்துள்ளது. இவர்களை கவுரவிக்க முடிவு செய்துள்ளோம். சிறப்பாக நடக்கவுள்ள இந்த விழாவில், வீரர்களுக்கு மற்ற மாநிலங்கள் கொடுத்த பரிசுகளை விட அதிகமாக கொடுக்கவுள்ளோம்.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய, அந்தந்த துறைகளுக்கு <உத்தரவிட்டுள்ளேன். ஆனால் பாராட்டு விழா இந்த மாதம் நடக்காது. தோனியின் முடிவை பொறுத்து, விழாவுக்கான தேதி முடிவாகும்.
இவ்வாறு சுதேஷ் மகத்தோ கூறினார்.

4வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஆன்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், 103 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளில் வென்ற இளம் இந்திய அணி, தொடரை(3-0) எளிதாக கைப்பற்றியது. நேற்று ஆன்டிகுவாவில் முக்கியத்துவமில்லாத நான்காவது போட்டி நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங் தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்: வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் ஒரு முறை திணறல் துவக்கம் கண்டது. இஷாந்த் வேகத்தில் டான்சா ஹியாத்(1) காலியானார். பிரவீண் குமார் பந்தில் சர்வான்(1) அவுட்டானார். அப்போது 2 விக்கெட்டுக்கு வெறும் 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் டேரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ் இணைந்து போராடினர். அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ், இஷாந்த் சர்மா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தொடர்ந்து அமித் மிஸ்ரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். மிஸ்ரா சுழலில் பிராவோ(15), மர்லான் சாமுவேல்ஸ்(8) சிக்கினர். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ் அரைசதம் கடந்தார். இவர் 67 ரன்களுக்கு ரன் அவுட்டாக, நிலைமை மோசமானது. இதற்கு பின் போலார்டு, கார்ல்டன் பாக் இணைந்து அணியை மீட்டனர். மனோஜ் திவாரி ஓவரில் போலார்டு ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிஸ்ரா ஓவரிலும் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். அரை சதம் கடந்த போலார்டு(70), அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் இணைந்து அதிரடி காட்டினர். இஷாந்த் ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, பாக் 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.

நழுவிய "ஹாட்ரிக்: பிரவீண் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கார்ல்டன் பாக்(39), ரசல்(25) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதை யடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி ஒரு ரன் எடுக்க, பிரவீண் வாய்ப்பு பறிபோனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. டேரன் சமி(1), ரோச்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் சரிவு: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். டேரன் சமி வேகத்தில் மனோஜ் திவாரி(2), பார்த்திவ் படேல்(26) அவுட்டாகினர். ரசல் பந்தில் பத்ரிநாத்(12) வெளியேறினார். மார்ட்டின் வலையில் விராத் கோஹ்லி(22) சிக்கினார். தொடர்ந்து ரோகித் சர்மா 39 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி, 39 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து, 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை மார்டின் தட்டிச்சென்றார். தொடரின் 5வது மற்றும் இறுதிப்போட்டி 16ம் தேதி நடக்கிறது.

100வது போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று 100வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதன் மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா சமன் செய்தது. இந்திய அணி ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியுள்ளது.

கீமர் ரோச் காயம்: இஷாந்த் வீசிய போட்டியின் கடைசி ஓவர் பரபரப்பாக இருந்தது. 4வது பந்தை இவர் "பவுன்சராக வீச, அது கீமர் ரோச்சின் "ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதன் விளைவாக அவரது வாய் பகுதியில் இருந்து ரத்தம் வந்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* ஐந்தாவது பந்தில் ரோச் ஒரு ரன்னுக்காக ஓடினார். அப்போது இஷாந்த் "த்ரோ செய்ய "பெயில்ஸ் பறந்தது. இந்திய வீரர்கள் அரைகுறையாக "அப்பீல் செய்தனர். அம்பயர் மால்கமும், "டிவி அம்பயரிடம் கேட்கவில்லை. "ரீப்ளேயில் ரோச் ரன் அவுட்டானது தெளிவாக தெரிந்தது. இதனை "டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்த ஹர்பஜன் "அவுட் என அலறியும் பலன் கிடைக்கவில்லை.

Monday, 13 June 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!

ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

Sunday, 12 June 2011

ரோகித் சர்மா அபாரம்: ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரையும் வென்றது இந்தியா


ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. 
இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, ராம்பால் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச்சுடன் அறிமுக வீரராக டான்ஜா சேர்க்கப்பட்டார். "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, பீல்டிங் தேர்வு செய்தார்.

மிஸ்ரா அபாரம்:வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் எட்வர்ட்ஸ், "டக் அவுட்டானார். சர்வான் 28 ரன்கள் எடுத்தார். இதன் பின் அமித் மிஸ்ரா சுழலில் அசத்த துவங்கினார். இவரது சுழலில் சிக்கி, சாமுவேல்ஸ், டான்ஜா தலா ஒரு ரன்னுடன் திரும்பினர். சிம்மன்ஸ் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். 
அதிரடி போலார்டு (6), கேப்டன் சமி (3) நிலைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 96 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.

ரசல் அசத்தல்:இந்நிலையில் ஜோடி சேர்ந்த பக், ஆன்ட்ரூ ரசல் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரசல் அதிரடியில் ஈடுபட்டார். பிரவீண் குமார் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய இவர், யூசுப் பதானின் பந்தில் அடுத்தடுத்து சிக்சர் அடித்தார். இந்நிலையில், பக் (36) அவுட்டானார். மறுமுனையில் ரசல், தனது முதல் சர்வதேச அரைசதம் கடந்தார். இவர் ரெய்னாவின் ஓவரில், 2 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 22 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 225 ரன்கள் எடுத்தது. ரசல் 92 (64 பந்துகள்), ரோச் 7 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா, முனாப் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

சுமாரான துவக்கம்:எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, பார்த்திவ் படேல், சிகர் தவான் இணைந்து சுமாரான துவக்கம் கொடுத்தனர். சிகர் தவான் (4) ஏமாற்றினார். அம்பயரின் தவறான தீர்ப்பினால், விராத் கோஹ்லி "டக் அவுட்டானார். பத்ரிநாத் (11) ரன் அவுட்டானார். பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த பார்த்திவ் படேல் (46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். கேப்டன் ரெய்னா (3) பொறுப்பற்ற முறையில் திரும்பினார். யூசுப் பதானும் (1) அணியை கைவிட்டார். 

ரோகித் சர்மா அபாரம்:  இதன் பின்னர் ரோகித் சர்மாவும், ஹர்பஜன் சிங்கும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இந்த ஜோடி 7வது விக்கெட் இழப்பிற்க 88 ரன்கள் குவித்தனர்.  ஹர்பஜன் சிங் 64 பந்துகளில் 41 ரன்களுக்கு அவுட்டானார்.  இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் பிரவீண் குமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.  இறுதியில் இந்திய அணி 46.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 91 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். பிரவீண் குமார் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்.   வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் சமி, பிஸ்போ ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியது.

Saturday, 11 June 2011

சமச்சீர் கல்வித் திட்டம்-தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

சென்னை: நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போத நடைமுறையில் உள்ள மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் இது நீட்டிக்கப்படவிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று 2வது நாள் விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசுக்கு பலவேறு கேள்விகளை விடுத்தார். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?.

அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாகக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்?. எதற்காக இந்த அவசரம்.?

சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியி்ட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்?.

இந்த புத்தகங்களை ரத்து செய்வதால் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறதே. அது யாருக்கு இழப்பு?

சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதா?. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?

இப்படி திடீரென திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.

இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி, சரத்குமார் ரெட்டி அப்பீல்

டெல்லி: ஜாமீன் வழங்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோர் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி இருவரும் கடந்த மே 20ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கனிமொழி தனது மனுவில் தனக்கு சிறிய வயதில் மகன் உள்ளான். ஒரு தாயாக உடனிருந்து அவனைக் கவனிக்க வேண்டும். எனது கணவர் வெளிநாட்டில் தொழில் செய்வதால் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருவரும் பலனடைந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதாலும், இருவரையும் வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதாலும் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.

இதையடுத்து தற்போது இருவரும் இன்று உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

ஜாகிர், ஸ்ரீசாந்த் அதிரடி நீக்கம்!

புதுடில்லி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 20ம் தேதி ஜமைக்காவில் துவங்குகிறது.
மிதுன், பிரவீண் வாய்ப்பு:
இத்தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. இதில் காயம் காரணமாக சேவக், யுவராஜ், காம்பிர் இடம் பெறவில்லை. சச்சின் தானாகவே விலகி விட்டார். இப்படி முன்னணி வீரர்கள் இடம் பெறாத நிலையில் இந்திய அணிக்கு தற்போது இரட்டை "அடி' விழுந்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் பிரவீண் குமார், அபிமன்யு மிதுன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) வெளியிட்டுள்ள அறிக்கையில்,""வலது கணுக்கால் காயத்தால் ஜாகிர் கான் அவதிப்படுகிறார். ஸ்ரீசாந்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர்கள் காயத்தில் இருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்படும். மிதுன், பிரவீண் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜாகிர், ஸ்ரீசாந்த் குணமடைவதற்கு தேவைப்படும் நாட்கள் குறித்து பி.சி.சி.ஐ., விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதனால், வரும் ஜூலை 21ல் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இடம் பெறுவதும் சந்தேகமாக உள்ளது.
ஐ.பி.எல்., முன்னுரிமை:
முக்கிய டெஸ்ட் தொடர்களுக்கு முன் ஜாகிர் கான் காயம் அடைவது தொடர்கிறது. சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தோள்பட்டை காரணமாக பங்கேற்கவில்லை. இதே போல தொடையில் ஏற்பட்ட காயத்தால் வங்கதேச, இலங்கை தொடரில் ஸ்ரீசாந்த் விளையாட வில்லை. ஆனால், ஐ.பி.எல்., தொடரில் இவர்கள் கலந்து கொண்டனர். இது, தேசத்தை காட்டிலும் பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு வீரர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர் என்ற சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 

"ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் மூன்றாவது மோதல்

ஆன்டிகுவா: ஆன்டிகுவாவில் இன்று நடக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த இரு போட்டியில் வென்ற இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இந்திய அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
இந்திய அணியில் சச்சின், தோனி போன்ற சீனியர்கள் இல்லாத குறையே தெரியவில்லை. இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். சிகர் தவான், பார்த்திவ் படேல் நல்ல துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, கேப்டன் ரெய்னா, பத்ரிநாத் மீண்டும் அசத்துவார்கள் என்று நம்பலாம். பின்வரிசையில் யூசுப் பதான், ஹர்பஜன் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.
மிஸ்ரா அபாரம்:
வேகப்பந்து வீச்சில் பிரவீண் குமார், முனாப் படேல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி தான். சுழலில் ஹர்பஜன் சிங்குடன் சேர்த்து, அமித் மிஸ்ரா, யூசுப் பதானும் மிரட்டுகின்றனர். இன்று தங்களது அசத்தலை தொடரும் பட்சத்தில், இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை கைப்பற்றலாம்.
பிராவோ ஓய்வு:
 தொடர்ந்து இரண்டு தோல்விகளால் துவண்டு கிடக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் "மிடில் ஆர்டரில்' டுவைன் பிராவோவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது மேலும் சிக்கலைக் கொடுப்பது உறுதி. துவக்க வீரர் சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ், சீனியர் சர்வான், சாமுவேல்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தருவது உறுதி. கேப்டன் சமியும் பேட்டிங்கில் சற்று ஜொலிக்க முயற்சித்தால் நல்லது.
ரோச் வருகை:
பவுலிங்கை பொறுத்தவரையில் எதிர்வரும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு வருகிறது. இதனால் முதல் இரண்டு போட்டியில் இடம் பெறாத கீமர் ரோச், ஆன்ட்ரூ ரசல் இன்று அணிக்கு திரும்புகின்றனர். ராம்பால் நீக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆன்டிகுவா ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்கள் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றனர். இந்நிலையில் பவுலர்கள் மாற்றம் எந்தளவுக்கு பலன் தரும் என்பது இன்று தான் தெரியும்.
வெற்றி யாருக்கு?
முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இன்று வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று வென்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இதனால் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
----
சோதனை "களம்'
இன்று போட்டி நடக்கும் ஆன்டிகுவா மைதானம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எப்போதும் சோதனையாகவே அமைந்துள்ளது. இங்கு 2009ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி, 10 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மோசமான ஆடுகளம் காரணமாக ரத்துசெய்யப்பட்டது.
* தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு பங்கேற்ற 4 ஒருநாள், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் என, அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.
--
மழை வாய்ப்பு
ஆன்டிகுவாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக காணப்படும். இருப்பினும் மழை வரும் வாய்ப்பு இல்லை.
--
தொடர்கிறது கெய்ல் புறக்கணிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான அணியில், கெய்ல் புறக்கணிக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது போட்டிக்கான அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Wednesday, 8 June 2011

இந்திய அணியின் வெற்றி தொடருமா! * இன்று வெ. இண்டீசுடன் 2வது மோதல்

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. கடந்த போட்டியில் வென்ற சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, மீண்டும் வெற்றி பெற காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
ரோகித் அபாரம்:
நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சர்வான் (56), சாமுவேல்ஸ் (55) கைகொடுக்க, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
பின் சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (51), ரோகித் சர்மா (68*), சுரேஷ் ரெய்னா (43) உள்ளிட்டோர் கைகொடுக்க, 44.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 இரண்டாவது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் (டிரினிடாட்) நகரில் இன்று நடக்கவுள்ளது. துவக்க வீரராக பார்த்திவ் படேல் சாதிக்க வேண்டும். அரைசதம் கடந்து அசத்திய மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் இன்றும் கைகொடுக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்காத விராத் கோஹ்லி, இன்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, கேப்டன் சுரேஷ் ரெய்னா "சூப்பர் பார்மில்' இருப்பது நல்ல விஷயம். இவர்களுடன் பத்ரிநாத், யூசுப் பதான் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய இலக்கை எட்டலாம்.
ஹர்பஜன் நம்பிக்கை:
 ஹர்பஜன் சிங் இன்றும் விக்கெட் மழை பொழியலாம். இவருக்கு அமித் மிஸ்ரா, அஷ்வின், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம். வேகப்பந்துவீச்சில் முனாப் படேல், பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.
போலார்டு வாய்ப்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவ கிறிஸ் கெய்ல் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் சிறந்த துவக்கம் கிடைக்காததால், நல்ல ஸ்கோரை பெறமுடியவில்லை. எனவே இன்று சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ் ஜோடி சிறந்த துவக்கம் அளிக்க முயற்சிக்க வேண்டும். கடந்த போட்டியில் ஏமாற்றிய டேரன் பிராவோ, இன்று எழுச்சி பெற வேண்டும். "மிடில்-ஆர்டரில்' அரைசதம் கடந்து அசத்திய சர்வான், சாமுவேல்ஸ் ஜோடி இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம். போலார்டு, ஆன்ட்ரி ரசல் உள்ளிட்டோருக்கு விளையாடும் லெவன் அணியில் வாய்ப்பு அளித்தால் நல்லது.
பலமான வேகம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக காட்சி அளிக்கிறது. கேப்டன் சமி, ரவி ராம்பால் உள்ளிட்ட வேகங்கள் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் விக்கெட் மழை பொழியலாம். சுழலில் தேவேந்திர பிஷூ நம்பிக்கை அளிக்கிறார்.
வெற்றிநடையை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்ய வெஸ்ட் இண்டீசும் போராட இருப்பதால், விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

Tuesday, 7 June 2011

அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான், மீண்டும் உதிக்காது-ஜெயலலிதா

சென்னை:அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான். இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது என்பதைத் தெரிவித்து, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை தேவையென எடுக்கப்பட்ட முடிவினை நீக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு விவரம்:

எம்.ஜி.ஆர். அரசால் தமிழக சட்டமன்ற மேலவையை நீக்கும் தீர்மானம் 1986 ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை நீக்கும் சட்டம் 30.8.1986 அன்று அங்கீகரிக்கப்பட்டு 1.11.1986 முதல் அமல்படுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக, 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிப்பதற்கான தீர்மானத்தினை 20.2.1989 அன்று இந்த அவையில் நிறைவேற்றியது. 1991 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், எம்.ஜி.ஆர். அவர்களால் ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தினை 4.10.1991 அன்று இதே சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியது.

1996 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவையை உருவாக்க வேண்டும் என்ற அளவில் மீண்டும் ஒரு தீர்மானத்தினை 26.7.1996 அன்று நிறைவேற்றியது. மீண்டும் 2001 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற அதிமுக அரசு, சட்டமன்ற மேலவைத் தேவையில்லை என்ற அளவில் ஒரு தீர்மானத்தை 12.9.2001 அன்று இயற்றியது.

இதனையடுத்து, 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மைனாரிட்டி தி.மு.க. அரசு, நான்கு ஆண்டு காலம் கழித்து 12.4.2010 அன்று சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், மத்தியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இதற்கான சட்டத்தினையும் இயற்றியது. இருப்பினும், சட்டமன்ற மேலவைக்கான தொகுதி வரையறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்று தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால், சட்டமன்ற மேலவைக்கான தேர்தல்கள் நடைபெறாத சூழ்நிலை தற்போது உள்ளது.

சட்டமன்ற மேலவை தேவை என்று 2010 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ... இத்தகைய அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று அரிய ஆலோசனைகளைக் கூறத்தக்க வகையில் ... ” சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வருவோம்” என்ற அளவில் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக இருந்தவர்களும் இருக்கிறார்கள், கல்வியாளர்கள் இருக்கிறார்கள், சமூக எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்குகின்ற ஒரே இயக்கம் அதிமுக தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அப்படி இருக்கும்போது, சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். தன் துதி பாடுகிறவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சட்டமன்ற மேலவையை தி.மு.க. கொண்டு வந்ததே தவிர, பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை, சான்றோர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவிலே இருக்கின்ற 28 மாநிலங்களில், கர்நாடகா, மகராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேஷ், ஆந்திரப் பிரதேஷ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் மட்டும் தான் சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்றப் பேரவை ஆகிய இரு அமைப்புகளும் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற பெரும்பாலான மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை. இதிலிருந்தே மேலவை வேண்டும் என்ற கருத்து எவ்வளவு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை எளிதில் எவரும் தெரிந்து கொள்ளலாம்.

முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை எனக் கருதப்படும் மேலவை தேவையற்றது என்பதையே மிகத் திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளனர். எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிறைவேற்றிட சபதமேற்று, அதற்கான பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், அவருடைய கொள்கைகளின்படியும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேலான கருத்துக்களின்படியும், அனைத்து முற்போக்கு சிந்தனையுள்ளம் கொண்டவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளின்படியும், தமிழகத்திற்கு மேலவை தேவையில்லை என முடிவெடுத்து இத்தீர்மானத்தை உறுப்பினர்களின் முன்னர் வைத்துள்ளோம்.

திரும்பத் திரும்ப தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மேலவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறார்கள். இனிமேல் எந்தக் காலத்திலும் மீண்டும் ஆட்சிக்கு வருபவர்கள் மேலவையை கொண்டு வருவதற்கு வழியில்லாமல் செய்திட ஏதாவது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று இங்கே கேட்டுக் கொண்டனர். எனக்குத் தெரிந்தவரை மேலவை வேண்டுமென்று நினைக்கின்ற ஒரே கட்சி தி.மு.க. தான். ஆகவே, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து மேலவையை கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான். இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது என்பதைத் தெரிவித்து, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை தேவையென எடுக்கப்பட்ட முடிவினை நீக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு இந்த மாமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ

டெல்லி: தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது.

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு இதுதான் - சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம்.

இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அவரை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் தெரிகிறது.

தேமுதிகவினரின் தாக்குதல் தொடர்ந்தால் திமுகவில் சேர வடிவேலு முடிவு!

மதுரை: தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக அவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு வைகைப் புயல் வடிவேலு வந்துள்ளதாக தெரிகிறது.

வாயால் கெடுவது என்பதற்கு வடிவேலுதான் சரியான உதாரணம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தன் மீதும், தனது நடிப்பு மீதும் வைத்திருந்த, வைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளாமல், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி பிரசாரம் செய்து வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விட்டார்.

இப்போது தேர்தல் முடிவு பாதகமாக வந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது வீட்டோடு முடங்கியுள்ளார்.

மறுபக்கம் தேமுதிகவினரோ பிரச்சினையை இத்துடன் முடிக்காமல் வளர்த்துக் கொண்டே போகின்றனராம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவது, தாறுமாறாக திட்டுவது என்று பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

வடிவேலுதான் நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டாரே என்று விடாமல் தொடர்ந்து அவர்கள் அநாகரீகமாக நடந்து வருவதால் வடிவேலு கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்நது புலம்பியபடி வருகிறாராம் வடிவேலு. என்னைத்தான் வீட்டோடு முடக்கி விட்டார்களே, பிறகு எதற்கு தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். இப்படியே இவர்கள் தொடர்ந்து வந்தால் நானும் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக இவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதான், வேறென்னத்த செய்ய என்று கூறுகிறாராம் வடிவேலு.

இதற்கிடையே, உலகம் என்ற படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். இதில் 25 வேடங்களில் அவர் வரவுள்ளாராம். இந்தப் படத்தை வெளியில் விட்டால் போதும் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடித்து விடலாம், அதற்குப் பிறகு பத்து விஜயகாந்த வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அந்தப் படம் தொடர்பான பணிகளில் படு தீவிரமாக குதித்துள்ளாராம் வடிவேலு.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னை: ஏழை, எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 25,000 மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. தற்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்தத் திட்டத்தை அமல்படுத்த முதல் வேலையாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு ரூ. 25,000 நிதியுதவி மற்றும் 4 கிராம் தங்கக் காசு ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார் ஜெயலலிதா.

சர்மா, ரெய்னா அபாரம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: ரோகித் சர்மா, ரெய்னா கைகொடுக்க, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.

அஷ்வின் இல்லை: இந்திய அணியில் "ஆப்-ஸ்பின்னர் அஷ்வினுக்கு பதிலாக "லெக்-ஸ்பின்னர் அமித் மிஸ்ரா வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் "அதிரடி போலார்டு, "ஆல்-ரவுண்டர் ஆன்ட்ரி ரசல் இடம் பெறாதது ஆச்சரியம் அளித்தது. "டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.

மந்தமான துவக்கம்: இந்திய "வேகங்கள் போட்டுத் தாக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். லெண்டில் சிம்மன்ஸ், கிர்க் எட்வர்ட்ஸ் சேர்ந்து படுமந்தமான துவக்கம் தந்தனர். பிரவீண் குமார் வேகத்தில் சிம்மன்ஸ்(6) வெளியேறினார். அடுத்து வந்த டேரன் பிராவோ(4), முனாப் பந்தில் அவுட்டானார். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த எட்வர்ட்ஸ்(21), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். பின் அனுபவ வீரர்களான சர்வான், மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். இவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். யூசுப் பதான் ஓவரில் சாமுவேல்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் முனாப் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த சர்வான், அதற்கு அடுத்த பந்தில் 56 ரன்களுக்கு அவுட்டானார். அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 42வது ஓவரில் டுவைன் பிராவோ, சாமுவேல்ஸ் தலா ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஒரு நாள் அரங்கில் தனது 19வது அரைசதம் கடந்த சாமுவேல்ஸ்(55), ரெய்னா பந்துவீச்சில் போல்டானார். பின் சுழலில் கலக்கினார் ஹர்பஜன். இவரது வலையில் முதலில் டுவைன் பிராவோ(22) சிக்கினார். அடுத்து கார்ல்டன் பாக்(16) அவுட்டானார். கேப்டன் டேரன் சமி(4) ஏமாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.

திணறல் துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. பார்த்திவ் படேல்(13) வீணாக ரன் அவுட்டானார். ராம்பால் வேகத்தில் விராத் கோஹ்லி(2) வெளியேறினார். பிஷூ சுழலில் பத்ரிநாத்(17) நடையை கட்டினார்.

தவான், சர்மா அரைசதம்: தொடர்ந்து விளையாடிய சிகர் தவான் 51, ரெய்னா 43 ரன்களை எடுத்தனர். ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், 44.5 ஓவரில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரோகித் சர்மா பெற்றார்.