ஜெய்ப்பூர், மே 11: ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு இடங்கள் முன்னேறி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது பெங்களூர். அந்த அணியின் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்திலும் அபாரமாக ஆடி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் குவித்ததன் மூலம் 398 ரன்களுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் கெயில். விராட் கோலி 387 ரன்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் வாட்சன் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.
திராவிட் 31 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே சேர்க்க முடிந்தது.
கெயில் விளாசல்: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் தொடக்கத்தில் கெயில் நிதானமாக ஆடினார். ஆனால் தில்ஷான் பவுண்டரிகளை விரட்டிக் கொண்டே இருந்தார். இதனால் 6 ஓவர்களில் 60 ரன்களைக் கடந்தது பெங்களூர். தில்ஷான் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கெயிலுடன் ஜோடி சேர்ந்தார் கோலி.
இதன்பிறகு கெயிலின் ஆட்டத்தில் வேகம் பிறந்தது. பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தன. 33 பந்துகளில் அவர் அரைசதமடித்தார்.
17-வது ஓவரின் கடைசிப் பந்தில் கோலி சிக்ஸர் அடிக்க பெங்களூர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கெயில் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், கோலி 39 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அரவிந்த் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
ராஜஸ்தான் 146/6
(வாட்சன் 34,
அரவிந்த் 3வி/34)
பெங்களூர் - 151/1
(கெயில் 70*, கோலி 39*)

No comments:
Post a Comment