Sunday, 22 May 2011

சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு!


சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


முந்தைய தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்டது சம்ச்சீர் கல்வி திட்டம். கடந்த ஆண்டு 1ஆம் வ்குப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் ஜூன் மாதம் துவங்கும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஏழு கோடிக்கும் அதிகமாக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 85 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அச்சடிக்க வேண்டாம் என்றும், மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டாம் என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்ச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் 15ஆம் திகதி பள்ளி திறக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment