டிரினிடாட்: சச்சின், தோனி போன்ற சீனியர்கள் இல்லாத இளம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தது. இரு அணிகள் இடையிலான "டுவென்டி-20' போட்டி நாளை நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசில் ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த போட்டிகளில் இருந்து சீனியர் சச்சின், கேப்டன் தோனி, ஜாகிர் கானுக்கு ஓய்வு தரப்பட்டது. காயம் காரணமாக சேவக், காம்பிர் பங்கேற்கவில்லை. காய்ச்சலால் யுவராஜ் சிங்கும் செல்லவில்லை.
இதனால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக தேர்வு பெற்றார். இவரது தலைமையிலான இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் அதிகாலை, மும்பையில் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றனர். இங்கிருந்து நேரடியாக அங்கு செல்ல முடியாது என்பதால், முதலில் லண்டன் சென்று, அங்கிருந்து வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் நகருக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றனர். அவர்களை டிரினிடாட் அண்டு டுபாகோ கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் வரவேற்றனர்.
வீரர்கள் சோர்வு:
நீண்ட தூரம் பயணம் செய்ததால், இந்திய வீரர்கள் அனைவரும் சோர்வாக காணப்பட்டனர். சரியான தூக்கமில்லாததால் கேப்டன் ரெய்னா உட்பட பலரது கண்கள் சிவந்து காணப்பட்டது. பெரும்பாலான வீரர்களின் தலைமுடிகள் அலங்கோலமாக இருந்தது.
ரெய்னா உறுதி:
இருப்பினும் நம்பிக்கையுடன் காணப்பட்ட கேப்டன் ரெய்னா, இத்தொடர் குறித்து கூறுகையில்,"" இது இளம் வீரர்கள் அடங்கிய அணி. அனைத்து வீரர்களும் தேசத்துக்காகவும், தங்களுக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளனர்,'' என்றார்.
அணியின் துணைக் கேப்டன் ஹர்பஜன் சிங் கூறுகையில்,"" அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு, இத்தொடர் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். இதனால், களைப்பு அல்லது சோர்வு எல்லாம் ஒரு காரணமே இல்லை. இவை எல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது என்று நம்புகின்றேன்,'' என்றார்.
அதிக வரவேற்பு:
இந்திய அணியில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 9 வீரர்கள், தற்போது இடம் பெறவில்லை. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் போலார்டு, கெய்ல், ஜெரோம் டெய்லர், கீமர் ரோச் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், அங்கு அதிக பரபரப்பு காணப்படுகிறது. வீரர்களுக்கு அதிக வரவேற்பும் கொடுக்கப்பட்டது.
இன்று "டுவென்டி-20':
இதனிடையே நீண்ட பயண களைப்பு இருந்தாலும், திட்டமிட்டபடி வீரர்கள் பயிற்சியில் பங்கேற்பார்கள். ஏனெனில் நாளை "டுவென்டி-20' போட்டி நடக்கவுள்ளது. என, இந்திய அணி மாஜேனர் அமிதாப் சவுத்ரி தெரிவித்தார். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. இதேபோல முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் விற்பனையும் சிறப்பாக உள்ளது.
---
அம்பயர் மறுபரிசீலனை இல்லை
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை (யு.டி.ஆர்.எஸ்.,) சமீபகாலமாக பெரும்பாலான போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் துவக்கத்தில் இருந்தே இதை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்த்து வருகிறது. இந்நிலையில் போட்டியை நடத்தும் நாடு விரும்பும் பட்சத்தில், யு.டி.ஆர்.எஸ்., முறையை பயன்படுத்தலாம். ஆனால் பி.சி.சி.ஐ.,க்கு விருப்பம் இல்லாததால், எதிர்வரும் தொடரில் "டுவென்டி-20', ஒருநாள் அல்லது டெஸ்ட் என எந்த போட்டியிலும், இம்முறை பயன்படுத்தப்பட மாட்டாது என, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment