மும்பை, மே 24: மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.
சென்னை வீரர் ரெய்னா 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி தேடித்தந்தது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் கெயில் 8 ரன்களில் வெளியேறினார். அகர்வால் 34 ரன்கள் எடுத்தார். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி சென்னை பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். இதனிடையே டிவில்லியர்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். கோலி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாச அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
ரெய்னா விளாசல்: பின்னர் ஆடிய சென்னை அணியில் மைக் ஹசி ரன் ஏதுமின்றியும், முரளி விஜய் 5 ரன்களிலும் வெளியேறினர். இதன்பிறகு ரெய்னாவும், தோனியும் வேகமாக விளையாடினர். கடைசி 4 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஜாகீர்கான் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார் ரெய்னா. தோனி 19 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மோர்கல் களம் கண்டார்.
மிதுன் வீசிய 19-வது ஓவரில் மோர்கல் 2 சிக்ஸரும், ரெய்னா 1 சிக்ஸரையும் விளாசினர். இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. வெட்டோரி கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசிய மோர்கல், 4-வது பந்தில் சிக்ஸர் அடித்தார்.
இதனால் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ரெய்னா 73 ரன்களும், மோர்கல் 10 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

No comments:
Post a Comment