Friday, 13 May 2011

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி


30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறது.
முன்னாள் முதல்வரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற புதுக்கட்சி அமைத்து அதிமுகவுடன் கூட்டணியில் போட்டியிட்டவருமான என்.ரங்கசாமி இந்த வெற்றியை சாதித்திருக்கிறார்.
கட்சிவாரி முடிவு
என்.ஆர்.காங்கிரஸ் 15
காங்கிரஸ் 7
அதிமுக 5
திமுக 2
சுயேட்சை 1

அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, 17 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்றிருக்கிறது. அதிமுக 10 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றிருக்கிறது.
காங்கிரஸ் 7 இடங்களிலும், அதன் கூட்டணிக்கட்சியான திமுக 2 இடங்களிலும் வென்றிருக்கிறது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வென்றிருக்கிறார்.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்து உட்கட்சிப் பூசல்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட என்.ரங்கசாமி தொடங்கிய பிராந்தியக் கட்சி, ஆளும் காங்கிரஸை மிகக்குறுகிய காலத்திலேயே தேர்தலில் வீழ்த்தியிருக்கிறது.

No comments:

Post a Comment